பிருந்தா மாஸ்டர் இயக்கிய ‘தக்ஸ்.’ டிரெய்லரை விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா வெளியிட்டு வாழ்த்து!

‘ஹே சினாமிகா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தனது 2-வது படமாக முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக ‘தக்ஸ்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய தக்ஸ் படத்தின் அதிரடியான டிரெய்லரில் படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாபாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

சாம் சி.எஸ்ஸின் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு  கைதேர்ந்த இயக்குநரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.

தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் : பிருந்தா
தயாரிப்பு : HR  பிக்சர்ஸ் – ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் – யுவராஜ்
இணை இயக்குனர்: ஹரிஹரகிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here