இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் 10வது படமாக ‘தண்டகாரண்யம்.’ முதன்மை பாத்திரத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ்

அழுத்தமான கதையம்சமுள்ள, சாதி அரசியலைப் பேசுகிற, தரமான படங்களை தனது ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் இயக்குநர் பா. இரஞ்சித்.

‘பரியேறும் பெருமாள்’ ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சேத்துமான்’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஜெ பேபி உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இருக்கின்றன.

அந்த வரிசையில் 10-வது படமாக ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தை தயாரிக்கிறது நீலம் புரொடக்ஷன்ஸ்.

படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி கவனிக்க வைத்துள்ளது. இணையத்தில் பரவி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

முதற்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தை, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

உமாதேவி, அறிவு, தனிகொடி பாடல்களை எழுத ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே.
எடிட்டிங் பணியைக் கவனிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here