இயக்குநர் ஹெச்.வினோத்தின் உதவியாளர் இயக்கிய ‘துரிதம்’ படத்தில் ஆண்ட்ரியாவின் கவர்ந்திழுக்கும் பாடல்!

தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ‘ரோடு மூவி’ ஜானரில் இயக்குநர் ஹெச்.வினோத்தின் உதவியாளர் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்.’

இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், ‘பூ’ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராம்ஸ் ராமச்சந்திரன் நடித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் படத்தை பார்த்து பாராட்டியதுடன், பட ரிலீஸ் தொடர்பாக சில ஆலோசனைகளையும் படக்குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

இந்தப்படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் அமுதன் ஆத்ம சாந்தி இசையமைப்பில் ஆண்ட்ரியா பாடிய ‘நில்லாமலே..’ என்கிற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நரேஷ் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படக்குழு:-
தயாரிப்பு: ஜெகன்
இயக்கம்: சீனிவாசன்
இசை: அமுதன் ஆத்ம சாந்தி & நரேஷ்
ஒளிப்பதிவு: வாசன்
படத்தொகுப்பு: நாகூரான்
ஆக்சன்: மணி
மக்கள் தொடர்பு: கேஎஸ்கே. செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here