தமிழ்ப் படங்களில் நடிக்க திட்டம்… ஹாலிவுட் பட இயக்குநர் ‘தி கிரேட் எஸ்கேப்’ சந்தீப் ஜே.எல் பேட்டி!

ஹாலிவுட் இயக்குநர் சந்தீப் ஜே.எல் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தி கிரேட் எஸ்கேப்.’ இந்த படத்தில் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சந்தீப் ஜே.எல், ‘அவுட்ரேஜ்’ (Outrage) படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். கடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவுட்ரேஜ்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சந்தீப் ஜே.எல் இயக்கியிருக்கும் இரண்டாவது ஹாலிவுட் படமான ‘தி கிரேட் எஸ்கேப்’ தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

அதையடுத்து படம் குறித்து சந்தீப் ஜே.எல் பேசும்போது, “அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் ஜே.எல், சந்தர்ப்ப சூழ்நிலையால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, அவரை அந்த கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து நாயகனை மற்றொரு மாஃபியா குழுவின் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இரண்டு மாஃபியா குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. இறுதியில் நாயகனை பாபு ஆண்டனி எப்படி காப்பாற்றுகிறார், எதற்காக காப்பாற்றுகிறார், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், மெய் சிலிர்க்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடனுடம் சொல்லியிருக்கிறோம்” என்றவர்,படத்தில் இடம்பெறுள்ள சண்டைக்காட்சிகள் குறித்து பேசும்போது, “நான் பல படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு இதுவரை ரசிகர்கள் பாத்திராத ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன். மிக பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தும், ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

ஐந்து சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில் மிக சிறப்பாக வந்திருக்கிறது” என்ற சந்தீப் ஜே.எல் தமிழில் கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளார்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here