‘ஜெயிலர்’ பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து!

தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்புடன் இணைந்தது) சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டியு பவுலில் நடந்த தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் லீக்கின் இறுதிப் போட்டியில், நடப்பு மாநில சாம்பியன் அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோரை வீழ்த்தினார்.

கடந்த ஒரு மாதம் காலமாக நடைபெற்ற லீக்கின் இறுதிப் போட்டி மூன்று பக்க நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில், அபிஷேக் துதாசியா, ஷபீர் தன்கோட் மற்றும் பார்த்திபன்.ஜே ஆகியோர் போட்டியிட்டனர். இரண்டு போட்டிகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், அபிஷேக், பார்த்திபன் மற்றும் ஷபீர் ஆகியோர் தங்களில் நாக் அவுட் அரையிறுதியை வென்ற பிறகு ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்.

மூன்று பவுலர்களையும் பிரிக்கும் 13 பின்களின் மிகக் குறைவான வித்தியாசத்தில் முதல் ஆட்டம் முடிந்தது. ஷபீர் 203 ரன்களும், பார்த்திபன் 202 ரன்களும் எடுத்த நிலையில் அபிஷேக் 216 ரன்கள் எடுத்தார். மேலும், 2 வது ஆட்டத்தில் அபிஷேக் துதாசியா 259 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதனால், இரண்டாவது ஆட்டத்தில் 204 ரன்கள் எடுத்த ஷபீரை 68 பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபிஷேக் வெற்றி பெற்றார். இதனால் ஷபீர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பார்த்திபன் தனது இரண்டாவத் உஆட்டத்தை 192 ரன்களுடன் முடித்தார்.

அபிஷேக் துதாசியா லீக் முழுவதும் நிலையாக விளையாடி, கடந்த மூன்று வாரங்களில் 24 ஆட்டங்கள் விளையாடி ஒட்டு மொத்தமாக 4781 பின்ஃபாலுடன் முடித்தார்.

போட்டியின் முடிவில் வெற்றியாளருக்கு பரிசளிக்கும் விழாவில் பிரபல திரைப்பட பாடலாசிரியரும், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அதிரடியான பாடல் எழுதி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவருமான சூப்பர் சுப்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here