தி கார்ஃபீல்டு மூவி (The Garfield Movie) சினிமா விமர்சனம்

Garfield (voiced by Chris Pratt) in THE GARFIELD MOVIE.

வீட்டுப் பூனை காட்டுப்பூனையாகி அதிரிபுதிரி சாகசங்களில் ஈடுபடுகிற கதை. நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பிடித்தமான அனிமேசன் உருவாக்கத்தில், ‘தி கார்ஃபீல்டு மூவி’ சீரிஸில் 6-வது படம். இயக்கம் Mark Dindal

Odie and Garfield (voiced by Chris Pratt) in THE GARFIELD MOVIE.

கார்ஃபீல்டு என்ற குட்டிப்பூனை மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, ஓடி என்கிற நாய்க்குட்டியுடன் நட்பாக, ஜாலியாக வாழ்நாளைக் கழிக்கிறது. ஒரு கட்டத்தில் எப்போதே பிரிந்த விக் என்ற தன் தந்தை பூனையை சந்திக்கிறது. அதன்பின் அவர்களின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கின்றன. தந்தை ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள காப்பாற்றும் பொறுப்பு கார்ஃபீல்டுக்கு வந்து சேர்கிறது. அதன்பின் என்னவானது என்பதே திரைக்கதை… கதைநாயகனான கார்ஃபீல்டுக்கு பிரபல நடிகர் கிரிஸ் பிராட் குரல் கொடுத்திருக்க மற்ற பிரதான பாத்திரங்களில் வருகிற குட்டிச் சுட்டிகளுக்கு சாம்வேல் ஜாக்சன், ஹார்வே கியூலன் உள்ளிட்டோர் குரல் பங்களிப்பு செய்திருப்பது கவனம் ஈர்க்கிறது.

John (voiced by Nicholas Hoult) with baby Garfield.

கிட்டத்தட்ட படம் முழுக்க காமெடிக்கு பஞ்சமில்லை என்றாலும், கார்ஃபீல்டு உணவருந்தும் காட்சிகளும், ரயிலில் பயணிக்கும் காட்சிகளில் அவதிப்படுவதும் கூடுதலாய் ரசிக்க வைக்கின்றன. காட்டில் நடக்கும் சாகசக் காட்சிகளில் இருக்கும் அதிரடி குழந்தைகளை அதிகம் கவரும். காமெடி இருக்கிற அளவுக்கு கதையில் சென்டிமெண்ட்டும் அதிகம்.

பின்னணி இசை, அனிமேஷன் உருவாக்கம் அனைத்தும் வழக்கம்போல் நேர்த்தி. கதையில் புதுமை என பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும் குழந்தைகள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரசித்து சிரித்து மகிழ்வதற்கான அத்தனை அம்சங்களும் இருப்பதால், தாராளமாய் டிக்கெட் போடலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here