‘தி மார்வெல்ஸ்’ சினிமா விமர்சனம்

கேப்டன் மார்வெல், மோனிகா ரேம்போ, மிஸ் மார்வெல் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள படம் ‘தி மார்வெல்ஸ் (2023).’

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளிவந்திருக்கும் 33-வது சூப்பர் ஹீரோ திரைப்படம் இது. ‘தி மார்வெல்ஸ்’ 2019-ல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.

Nia Da Costa இயக்க, Sean Bobbitt ஒளிப்பதிவு செய்துள்ளார். Laura Karpman இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்,ஹிந்தி மொழிகளில் இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகியுள்ளது.

மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள், பெரும் அழிவு சக்திகளை உருவாக்கி வில்லனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விண்மீன் திரளைக் (Galaxy) காப்பாற்ற ஒருங்கிணைப்பதே ‘தி மார்வெல்ஸ்’ படத்தின் கதை.

கேப்டன் மார்வெலின் சக்தியைக் கண்ட பிறகே நிக் ப்யூரிக்கு அவெஞ்சர்ஸ் அணியை உருவாக்கும் உத்வேகம் பிறந்து, கெரோல் போன்ற சூப்பர் ஹீரோக்களைக் கண்டுபிடித்து, உலகைக் கண்காணிக்கும் பொறுப்பினை அவெஞ்சர்ஸ்க்கு வழங்கத் தூண்டியது. ‘தி மார்வெல்ஸ்’ படத்தில், கொடுங்கோல் க்ரீக்களிடம் இருந்து தனது அடையாளத்தை மீட்டெடுத்து, உச்ச உளவுத்துறையைப் பழிவாங்குகிறார்.

ஆனால், எதிர்பாராத விளைவுகளால் நிலைகுலையின் பிரபஞ்சத்தின் சமநிலையைக் காக்கும் பொறுப்பு கேப்டன் மார்வெலுக்கு ஏற்படுகிறது. அவரது கடமைகள் அவரை ஒரு க்ரீ புரட்சியாளருடன் இணைக்கப்பட்ட ஓர் இயல்பிற்கு முரணானதொரு புழுத்துளைக்குள் (Wormhole) அனுப்பும்போது, அவரது சக்திகள் ஜெர்சி நகரத்தின் சூப்பர் ரசிகையான கமலா கான் எனும் மிஸ். மார்வெலிடமும், கெரோலை விட்டுப் பிரிந்த மருமகள் கேப்டன் மோனிகா ரேம்போவிடமும் சிக்கிக் கொள்கின்றனர். அதன்பிறகான சாகசங்கள் அத்தனையும் அதிரடி.

கெரோல் டான்வெர்ஸ் எனும் கேப்டன் மார்வெலாக ப்ரீ லார்சனும், ஃபோட்டான் எனும் மோனிகா ராம்போவாக டியோனா பாரிஸும், கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக இமான் வெல்லானியும் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here