உத்தரபிரதேசத்தில் வசிக்கும் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக போராடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் ‘உருமல்.’குருகாந்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஷிவன்யாராணி நடிக்க கார்த்திக் ஶ்ரீ, ராம் ராஜேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ராஜா சாகிப் , கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர் மற்றும் ஸ்ரீதேவி அணில் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கும் கிரவுன் ராஜேஷ், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்ளவிருக்கிறார்.
‘டபுள் எஞ்சின் புரொடக்ஷன்’ ஆர். ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் படத்துவக்கவிழா 20.5. 2023 அன்று காலை கேரளாவில் நடந்தது.
படப்பிடிப்பு சென்னை மற்றும் உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேசத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.