பவன் கல்யாண் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் போஸ்டர்!

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இன்று வெளியான போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து மாஸான தோற்றத்திலிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும் அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும் ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

முன்பே தெரிவித்தபடி இந்த மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார்கள்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – அயனங்கா போஸ்
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு – சோட்டா கே. பிரசாத்
சண்டைப் பயிற்சி – ராம் லக்ஷ்மன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here