சார்லி நடித்த ‘உடன்பால்’ படத்துக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் குவிந்த பாராட்டு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14; 2023 அன்று தொடங்கி நடந்து வருகிறது.

உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 படங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு நாளும் 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் படங்களைப் பார்த்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், ‘டி கம்பெனி’ கே.வி.துரை தயாரிப்பில், நடிகர்கள் சார்லி, லிங்கா உள்ளிட்டோர் நடித்த ‘உடன்பால்’ திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி திரையிடப்பட்டது.

இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்பட தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் காட்சிப்படுத்திய இந்த படத்தை பார்த்தவர்கள் பெரும் கரகோஷம் எழுப்பி, உடனிருந்த படக்குழுவினரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரைப்பட ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் குவித்த உடன்பால்’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here