உப்பு புளி காரத்துடன் வரப்போகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்! அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘உப்பு புளி காரம்’ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகியுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் இந்த சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், குறிப்பாக தற்காலத்திய இளைஞர்களிடமிருந்து அபரிமிதமான அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here