100 மில்லியன் பார்வை நிமிடங்கள். ZEE5 ஓடிடி தளத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சாதனை!

வெற்றிமாறன் இயக்கி, சூரி – விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விடுதலை’ பாகம் 1 திரைப்படம் சமீபத்தில்  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி குறைந்த காலகட்டத்திலேயே 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, 2023, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான ‘விடுதலை பாகம் 1’  சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும்,  ரசிகர்கள் கொண்டாடும்  படைப்பாகவும் அமைந்துள்ளது.

இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்முறையாக, மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். திரை வாழ்வின் முக்கியமான பாத்திரத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் காணாத பல காட்சிகளுடன்  இயக்குநரின் முழுமையான பார்வையில் அன்கட் வெர்ஷனாக இப்படம் ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.

2023  ஆம்  ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே  தளத்திற்கு மிகவும்  வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும்  ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படமும் இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here