விஜய் சேதுபதியின் புதிய படம் மலேசியாவில் பூஜையுடன் தொடக்கம்!

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுககுமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரமாண்டமாக நடந்தது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இதனிடையே இயக்குநர் பி. ஆறுமுக குமார், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது என்பதும்,
விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தினை இயக்கிய ஆறுமுககுமார் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்திருப்பதால் படத்திற்கு தொடக்க நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C ஸ் என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – கரண் பகதூர் ராவத்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ்
கலை இயக்கம் – ஏ.கே. முத்து
சண்டை காட்சிகள் – தினேஷ்குமார் சுப்பராயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here