காதலியைக் கரம்பிடித்த ‘எருமை சாணி’ விஜய்! மணவிழாவில் கரைபுரண்ட உற்சாகம்.

‘எருமை சாணி’ என்ற யூடியூப் வீடியோக்கள் மூலம் யூடியூப் உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் விஜய். சமூகத்திற்கு தேவையான விஷயங்களை நகைச்சுவை பாணியில் வீடியோக்களாக வெளியிட்டதால் விஜயின் வீடியோக்களுக்கு தனி ரசிகர் வட்டம் உருவானது. மேலும், விஜயின் நடிப்பு மற்றும் நகைச்சுவை பேச்சுக்களால் அவருக்கென்றும் தனியாக ரசிகர் வட்டம் உருவாக, அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார். யூடியூப் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகராக எண்ட்ரியான விஜய், ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ மற்றும் ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்து பெரிய திரை நடிகராகவும் பிரபலமானார்.  இதற்கிடையே நடிகராக இருந்த விஜய்க்கு திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் திரும்பியது. அதன்படி அருள்நிதியை நாயகனாக வைத்து ‘டி பிளாக்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான ‘டி பிளாக்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஜய்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது காதலி நட்சத்திராவை கரம் பிடித்துள்ளார்.  விஜய் – நட்சத்திரா திருமணம் கோவையில் உள்ள கயல் வெட்டிங் பேலஸில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவில் ஊடகத்தை சேர்ந்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.விஜயின் பெற்றோர் ராஜேந்திரன் – லதா மற்றும் நட்சத்திராவின் பெற்றோர் மூர்த்தி – ஷீபா ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here