‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடித்து. ஏ.ஆர்.கே. சரவன் இயக்கி, கடந்த வாரம் வெளியான படம் ‘வீரன்.’வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த குழந்தைகள் விசிலடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடிகர் ஆதி, இயக்குநர் சரவன் உள்ளிட்ட படக்குழுவினர், படம் பார்த்த குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மட்டுமல்லாமல் படம் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.