விறுவிறுப்பான மெடிக்கல் திரில்லர் சப்ஜெக்டில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ ஜூன் 16 ZEE 5 ஓடிடியில் வெளியீடு!

விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தமிழரசன் திரைப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் பிரீமியருக்கு தயாராகி வருகிறது.

தமிழரசன் படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீனாவும் (ரம்யா நம்பீசன்) தங்கள் மகன் பிரபாகருக்கு (பிரணவ் மோகன்) இதயம் பலவீனமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் மாற்று அறுவை சிகிச்சைக்குச் செல்கிறார்களோ அவ்வளவு நல்லது என்பதை அறிந்ததும் அதிர்ச்சியுற்றனர்.

மகனை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அங்கு இலாபத்தில் அதிக அக்கறை கொண்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் கல் நெஞ்சம் கொண்ட மருத்துவர்களால் நிரம்பியுள்ளனர். ஓர் அமைச்சருக்கும் இதய மாற்று சிகிச்சை தேவைப்படுவதால், பிரபாகருக்கு மருத்துவமனை முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறது. ஆத்திரமடைந்த தமிழரசன் மருத்துவமனையின் இதய நிபுணர் டாக்டர் முருகானந்தத்தை (சுரேஷ் கோபி) பிணைக் கைதியாக பிடித்து, முதலில் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க அவர்களை வற்புறுத்த முடிவு செய்கிறார். அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியுமா, குறிப்பாக அவரது ஊழல் உயர் அதிகாரி ராணா பிரதாப் சிங் (சோனு சூத்), இவரை வெல்ல விடுவாரா? இதுதான் தமிழரசன் படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here