விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கும் படம் ‘வள்ளி மயில்.’ ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா, ஜிபி முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘பிச்சைக்காரன் 2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவணன் தயாரிக்கும் இந்த படம் 1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா த்ரில்லராக உருவாகிறது. திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,பழநி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. 24 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்தபின் டிரெய்லர், டீசர் இசை வெளியீடு எப்போது என்ற அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன் 2′ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று ‘பிச்சைக்காரன் 2’ வெற்றியை கொண்டாடினர்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – டி.இமான்
ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன் முருகேசன்,
எடிட்டர் – ஆண்டனி
கலை இயக்கம் – உதயகுமார்
ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM )