சத்யராஜ் நடிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வெப்பன்.’ இந்த படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்டில் இந்த படத்தை ‘மில்லியன் ஸ்டுடியோ’ மன்சூர் தயாரித்திருக்கிறார்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் சில மலைப் பிரதேசங்களில் நடந்து முடிந்து பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு வெப்பன் படம் பற்றி பேசியபோது, “என் அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக பான் இந்திய அளவில் படத்தைத் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் எடுத்திருக்கிறார். முதன் முதலாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தியிருப்பது பெருமையாக உள்ளது. படத்தினை எல்லோரும் தியேட்டரில் பார்த்து மகிழுங்கள். இப்போது டீசரை பார்த்துக் கொண்டாடுங்கள்” என்றார்.