எம்.எல்.ஏ. ஒருவருக்கும், யூ டியூபர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை. அதிலிருந்து யூ டியூபர் தப்பினானா என்பதை கதைக்களமாக கொண்ட படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா.’
முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்டில் ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாகிறது.ராக் & ரோல் புரொடக்ஷன் மற்றும் ஏபி புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகனாக சுந்தர் மகரிஷி, கதாநாயகியாக விஜயலெஷ்மி நடிக்க, சன்னி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
படக்குழு:-
தயாரிப்பு – யாஸ்மின் பேகம், மணிமேகலை லெஷ்மணன்
இயக்கம் – ராஜ் கண்ணாயிரம்
கதை திரைக்கதை வசனம் – சுந்தர் மகரிஷி
ஒளிப்பதிவு – தீபக் தமிழ்ச்செல்வன்
எடிட்டிங் – ரமேஷ் மணி
இசை – ஜோசப் சந்திரசேகர்
சவுண்ட்ஸ் – சதீஷ் சாந்திவாசன்
போஸ்டர்ஸ் – செல்வா
டி ஐ – பவன்
மக்கள் தொடர்பு – சிவகுமார்