‘களவாணி 2’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பயணித்து வரும் துரை சுதாகரின் விருந்தோம்பல் பற்றி கோலிவுட்டே வியந்து பேசுவதுண்டு. அதற்கு காரணமிருக்கிறது.
சினிமா மீதான ஆர்வத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தாலும், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் துரை சுதாகரின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒட்டு மொத்த பிரபலங்களும் அங்கு குவிந்துவிடுவது வழக்கம்.
அந்த வகையில், துரை சுதாகர் அவர்களின் இளையமகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தஞ்சையில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மேயர் சண்.ராமநாதன், நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர்.அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.
வழக்கமான பாணியில் அவரது விருந்தோம்பல் வந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தது!