வெற்றிக் கூட்டணி இணையும் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட வெளியீட்டு உரிமையை பெற்ற டிரைடென்ட் ஆர்ட்ஸ்.

பாக்ஸ் ஆபீஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும்போது, நிச்சயம் வெற்றிதான். அந்த வகையில் ‘டிக்கிலோனா’ படப் இயக்குநர் கார்த்திக் யோகி – நடிகர் சந்தானம் கூட்டணியில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

படத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷூ, இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘டிடி 3′ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி இருக்கிறது.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மாறியுள்ள சந்தானத்தின் நட்சத்திர வேல்யூவை கருத்தில் கொண்டு, டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரிய அளவில் புரோமோஷனல் விஷயங்களைத் திட்டமிட்டுள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – தீபக்
படத்தொகுப்பு – சிவ நந்தீஸ்வரனின்
கலை இயக்கம் – ராஜேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி.ஸ்ரீ நட்ராஜ்
நடனம் – ஷெரிப்
இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here