எம்எல்ஏ.வோடு மோதும் யூ டியூபர்… பரபரப்பான கதைக்களத்தில் உருவாகும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களில் நிறைவு!

நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா.’ இந்த படத்தில் சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன், அபினய ஸ்ரீ இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்க, பிரபு, சன்னி பாபு இருவரும் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். அவர்களுடன் பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

படத்தின் கதை ஒரே நாளில் நடக்கும் விதமாக, முழுக்க முழுக்க காமெடி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

ஒரு எம்.எல்.ஏ.வுக்கும், ஒரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர். அந்த சிக்கலிலிருந்து 24 மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம்.

ராஜ் கண்ணாயிரம் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மூன்று வாரங்களுக்குள் அதாவது வெறும் இருபதே நாட்களில் நிறைவடைந்திருக்கிறது. சரியான திட்டமிடலாலும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பாலும் அதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் பின்னணி இசையமைப்பு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் துவங்கியுள்ளன.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: ‘ராக் அன்ட் ரோல் புரொடக்சன்’ யாஸ்மின் பேகம்
இணை தயாரிப்பு: மணிமேகலை லெஷ்மணன்
இயக்கம்: ராஜ் கண்ணாயிரம்
கதை, திரைக்கதை, வசனம்: சுந்தர் மஹாஸ்ரீ
ஒளிப்பதிவு: வெங்கட் முனிரத்னம், ஏ.சி.மணிகண்டன், ஸ்ரீநாத்
படத்தொகுப்பு: ரமேஷ் மணி
இசை: ஜோஸப் சந்திரசேகர்
நடனம்: ராஜ் கிரண், மாதவன், விஷ்ணு ராஜ்,
ஒலிப்பதிவு: சதீஷ் சாந்திவாசன்
பத்திரிகை தொடர்பு: பா .சிவக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here