விக்ராந்த், யோகிபாபு நடிக்கும் படத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! விறுவிறுப்பாக தொடங்கியது படப்பிடிப்பு.

விக்ராந்த், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா பூஜை நிகழ்வு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது.

சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்வில் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தாய் சரவணன், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

வித்தியாசமான திரைக்கதையில் ‘தா’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தையும் புதுமையான களத்தில் பரபரப்பான சைக்கலாஜிகல் திரில்லராக இயக்கி, தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்க இனிகோ பிராபகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உள்ளிட்டோருடன் இன்னும்பல பிரபல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஏவி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார்.

கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்கிறார்.

கலை இயக்குநராக ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக ஃபயர் கார்த்திக் பணியாற்றுகின்றனர். தஸ்தா நடனம் அமைக்கிறார். மக்கள் தொடர்பை மணவை புவன் கவனிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here