ஐந்து வில்லன்கள், இரண்டு கதாநாயகிகள்… கூடவே மதுரை ரவுடிசம்… பரபரப்பான கதைக்களத்தில் வினோத்குமார் நடித்து இயக்கிய ‘வீரநகரம்’ ரிலீஸுக்கு தயாராகிறது!

வினோத்குமார் இயக்கி நடித்துள்ள படம் ‘வீரநகரம்.’

மன்சூர் அலிகான், மஸ்காரா அஸ்மிதா, லொள்ளு சபா மனோகர், சுப்பிரமணியபுரம் டும்கான் மாரி, சிட்டுக்குருவி பாட்டி, வி ஜெ மைக்கேல்ராஜ், சேகர், சாராமோணு ரோஸ், ஸ்கெட்ச் கார்த்திக், விஜய், ஹரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தில் இடம்பெறுகிற கதாநாயகனுக்கான அறிமுகப் பாடலை படத்தின் இயக்குநர் வினோத்குமார் எழுதியுள்ளார்.

தேனிசைத் தென்றல் தேவா பாடியிருக்கும் குத்துப் பாடலை கவிஞர் திருண்சூர்யா எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் டி ராஜேந்தர் வெளியிட்டார்.

படத்தை பற்றி இயக்குநர் வினோத்குமாரிடம் கேட்டபோது, ”இந்த படம் ஐந்து வில்லன்கள், இரண்டு கதாநாயகிகள், பல்வேறு துணை நடிகர்கள். இப்படி பலரது பங்களிப்பில், முழுக்க முழுக்க சண்டை, கொலை, வன்மம், துரோகம், காமம், காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களுடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை ரவுடியிசத்தை சரியாக கையாண்டுள்ள படம் என்று பலரும் சொல்வார்கள். அந்தளவுக்கு காட்சிகளை நேர்த்தியாக உருவாக்கியுள்ளோம்.

படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. முன்னதாக ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு திரையுலக ஜாம்பவான்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக விரைவில் நடக்கவுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here