மே 16-ல் பாடல்கள் வெளியீடு… விரைவில் திரையரங்குகளில் படம் வெளியீடு… பரபரப்பான கட்டத்தில் பிஜேஷ் நாகேஷ் நடிக்கும் ‘வானரன்’ படக்கழு!

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் சர்வர் சுந்தரம், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபவத்துடன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘வானரன்.’

இந்த படத்தில் அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பரபரப்பாக பேசப்பட்ட ‘டூ’ எனும் படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”இந்த படம் பகல் வேஷம் என்னும் கலை, ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியல், தந்தை மகள் உறவு என பலவற்றையும் உணர்வுபூர்வமாக இணைத்துப் பிணைத்து உருவாகியுள்ளது” என்றார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

முன்னதாக மே 16-ம் தேதி அரசியல் பிரபலங்கள், திரையுலக முன்னோடிகள் முன்னிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here