திரையரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலிடத்தில் இருக்கிறது ஷாருக்கானின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே.’
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் டி ஆர் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சம்பாதித்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், சிலம்பரசன், திரிஷா நடித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டிருக்கிறது.