கமர்ஷியல் அம்சங்களோடும், சமூக அவலங்களை எடுத்துச் சொல்லும் கருத்துக்களோடும் உருவான ‘வா பகண்டையா’ ஏப்ரல் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தும் வகையிலும், காதலர்கள் உறவுகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வகையிலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பி.ஜெயகுமார் இயக்கியுள்ள படம் ‘வா பகண்டையா.’

இந்த படம் கமர்ஷியலாகவும் ‘சமூக அவலங்களை பேசும் படைப்பாகவும் உருவாகியுள்ளது. ஹீரோவாக விஜய தினேஷ் நடிக்க, ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அஜித் கோலி நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
ஒளிப்பதிவு: ஆரி ஆர்.ஜே.ராஜன்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
நடனம்: சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி
சண்டைக்காட்சிகள்: இடி மின்னல் இளங்கோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here