வேல்ஸ் கல்வி நிறுவன அதிபர் ஐசரி கணேஷ் விடுத்துள்ள அறிக்கை:-
இந்தியக் கல்வி வளர்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் கோ.விஸ்வநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற விழாவில் நானும் பங்கேற்றேன்.
கல்வித்துறையில் எனக்கு ஆசானாக விளங்கும் ஐயா அவர்கள் ஆற்றிய கல்விச்சேவை பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது, உயர் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் போதித்தது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இங்கு கல்வி பயில வந்த மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இத்தகைய மகத்தான மனிதரின் பாராட்டு நிகழ்வில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.