மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெ. குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தலைமையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இந்த சுயமரியாதை திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் சேதுபதி மணமக்களை வாழ்த்தினார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தலைமை வகித்து நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.