கவுண்டமணி – செந்தில் காமெடி மூலம் பிரபலமான பெயர் ‘வடக்குபட்டி ராமசாமி.’ அதையே தலைப்பாக வைத்து சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கிவரும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் டாக்டராக சந்தானத்துக்கு ஜோடியாக, மேகா ஆகாஷ் நடிக்க ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி.விஸ்வபிரசாத்துடன் விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கும் இந்த படம் பற்றி தயாரிப்பாளர்கள் பேசும்போது ‘இயக்குநர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ கூட கவுண்டமணியின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஒரு பீரியட் காமெடி டிராமா படமாக உருவாகிறது. படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறோம்’ என்றார்கள்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ், ”இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது” என்கிறார்.
படக் குழு:
இசை: சீன் ரோல்டன்,
ஒளிப்பதிவு: ‘விட்னெஸ்’ படப்புகழ் தீபக்,
படத்தொகுப்பு: ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘டெடி’ படப்புகழ் சிவ நந்தீஸ்வரன்,
கலை இயக்குநர்: ‘கோமாளி’ படப்புகழ் ராஜேஷ்,
நடன இயக்குநர்: ஷெரிஃப்.