ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்த ‘வெப்பன்’ படம் சார்பில் பைக் ஓட்டம்… நடிகர் வசந்த்ரவி, நடிகை தான்யா ஹோப் தொடங்கி வைத்தனர்.

சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வெப்பன்.’

புதிய டெக்னாலஜியில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படத்தை ‘மில்லியன் ஸ்டுடியோ’ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக 27.08.2023 ஞாயிறன்று காலை ஆறு மணிக்கு WearHelmetRally என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.நடிகர் வசந்த்ரவி, நடிகை தான்யா ஹோப், தயாரிப்பாளர் மன்சூர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சாலையில் வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக ஓட்டுவதும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துவதே இந்த ரேலியின் நோக்கம்.

ஓஎம்ஆரில் தொடங்கிய இந்தப் பயணம் தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில் முடிந்தது. இதில் பங்கு கொள்ள ராயல் என்ஃபீல்ட் ரைடர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here