‘வெப்பன்’ படக்குழுவின் ‘மிக்ஜாம்’ புயல் நிவாரண உதவி! நெகிழ்ந்த மக்கள்.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு திரைத்துறையினர் பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர்.

அந்த வரிசையில் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ படக்குழுவும் இணைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

உதவிகளை பெற்ற மக்கள் நெகிழ்ச்சியோடு வெப்பன் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here