மிர்ச்சி விஜய், அஞ்சலி நாயர் நடிக்கும் ‘WIFE’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சமீபத்தில் நடிகராக அறிமுகமாகி இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மிர்ச்சி விஜய் கதாநாயகனான நடிக்க, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற நாயகி அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘WIFE.’

படத்தில் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “கணவன், மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்த படம். அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். ‘WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்த படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படங்கள் விமர்சகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படக்குழு:
ஒளிப்பதிவு: கே.ஏ. சக்திவேல்
இசை: ஜென் மார்ட்டின்
கலை இயக்குநர்: சிவசங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here