ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘யோக்கியன்.’ ஆர் எஸ் கவிதா, சாம்ஸ்,குஷி முகர்ஜி, ஆர்த்தி சுரேஷ்,தேவி கிருபா, தினேஷ் மேட்னே மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா 15.6. 2023 அன்று மாலை சென்னையில் நடந்தது.
தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன், இயக்குநர்கள் லியாகத் அலிகான், செந்தில்நாதன், மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை அக்ஷயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் ஜெய் ஆகாஷ், அயோக்கியன் படத்தை பற்றி சொல்ல வேண்டு மென்றால் நான் கதை சொல்லச் சொல்ல அதை எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர் தேவைப்பட்டார். அப்படி ஒரு எழுத்தாளராகத்தான் இயக்குனர் சாய் பிரபாமீனா என்னிடம் சேர்ந்தார். அவருக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியவில்லை. பிறகு எனக்கு உதவியாளராக அமர்த்தினேன். மாமரம் என்ற படம் நான் இயக்க உதவி இயக்குநராக பிரபா பணியாற்றினார். அமைச்சர் படத்திலும் பணியாற்றினார். அவருக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தேன்.ஒருகட்டத்தில் உங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றார். சரி, கதை சொல் என்றேன் அதுவும் சொல்லத் தெரியவில்லை.
பிறகு நானே யோக்கியன் கதை எழுதி தந்தேன். யோக்கியன் என்றால் யார்? அயோகியனை காட்டினால்தான் யோக்கியனை காட்ட முடியும் . இதுதான் கதைச் சுருக்கம். இதுதவிர மொத்தம் 4 கதைகள் இதில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வரவில்லை.
30 இரவுகள் நான் தூங்காமல் ரெடி செய்ததுதான் இந்த யோக்கியன் ஸ்கிரிப்ட். சாய் பிரபாமீனா இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை கொடுத்தேன். நான் நீதானே என் பொன் வசந்தம் சீரியல் நடிக்கிறேன் அதில் நிறைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் என் படம் பார்க்க தியேட்டருக்கு வருவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பயில்வான் ரங்கநாதன், மற்ற மாநிலங்களில் சினிமா துறை நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா துறை நன்றாக இல்லை. திரையுலகினர் ஒட்டுமொத்தமாக சென்று சிறுபட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டால் நிச்சயம் தருவார்” என்றார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
திரைக்கதை, வசனம் இயக்கம் – சாய்பிரபா மீனா
ஒளிப்பதிவு – சார்க்கி & பால்பாண்டி
கதை – ஜெயசதீசன் நாகேஸ்வரன்
எடிட்டிங் – எஸ்.துர்காஷ்
சண்டைப் பயிற்சி – வி.ஆனந்தன்
இசை – சுமன் ஜூப்டி & யூகே முரளி
நடனம் – ரமேஷ் ரெட்டி
விளம்பர வடிவமைப்பு – வெங்கட் ஆர் கே
பாடலாசிரியர் – கானா சாய் பிரபா மீனா, கண்ணன் ஜி, ஜாக் ஜி
தயாரிப்பு – வி.மாதேஷ் மூன் ஸ்டார் பிக்சர்ஸ்
நிர்வாக மேனேஜர் – பீர் முகமது
மக்கள் தொடர்பு – வேலு