யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் திரண்ட 30,000 ரசிகர்கள். ரசிகருக்கு டூ வீலர் பரிசளிப்பு!

‘லிட்டில் மேஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி 5.8.2023 அன்று சென்னைஒய் எம் ச் ஏ மைதானத்தில் நடைபெற்றது. பாடகர்கள் ஹரிஹரன், ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என பலரும் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினர்.

நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here