திருக்குறள்களின் எண்ணிக்கை 1330. அதே எண்ணிக்கையில் தமிழர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடிய நிகழ்வு துபாய் அமீரகத்தில் சமீபத்தில் நடந்தது.
தமிழ்நாட்டின் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி எழுதி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
நிகழ்வில் முன்னதாக துபாய் தமிழ்ச் சங்கத் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்புரைற்றினார். மாஸ் ஈவென்ட்ஸ் முருகேசன் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.


