Home சினிமா ‘சந்திரமுகி 2’ வெற்றிபெற சூப்பர் ஸ்டார் பாணியில் மந்த்ராலய தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்!

‘சந்திரமுகி 2’ வெற்றிபெற சூப்பர் ஸ்டார் பாணியில் மந்த்ராலய தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்!

‘சந்திரமுகி 2’ வரும் செப்டம்பர் 28; 2023 அன்று வெளியாகவிருக்கும் நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தனி ஆலயம் கட்டி அவர் மீது அளவு கடந்த பக்தியை செலுத்தி வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே பட வெளியீட்டுக்கு முன்பாக மந்த்ராலயம் சென்று ராகவேந்திரரை தரிசித்து ஆசி பெற்றிருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்