Home சினிமா பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஹிட்லர்.’

படத்தின் நாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நடிகர் சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ படங்களை இயக்கிய தனா இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் விஜய் ஆண்டனியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்த படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இடம்பெற்றுள்ளது.

‘‘ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது” என் கிறார் படத்தின் இயக்குநர்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ டிடி ராஜா, டிஆர் சஞ்சய் குமார் பிர மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

விவேக் மெர்வின் இசையமைக்க, கன்னட வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்