கே பி தனசேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் பூங்கா.’
அழகு மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கௌசிக் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”’பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்காவை மண்மீது உள்ள சொர்க்கம் என்று சொல்லலாம். அத்தகைய பூங்காவுக்கு நாலு பசங்க பிரச்சனைகளோடு நுழைகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை” என்றார்.
நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, ரவி மரியா ஆகியோர் நடிப்பில் ‘குருமூர்த்தி’ என்ற படத்தை இயக்கியவர் கே.பி.தனசேகர். அந்த படத்தை வருமான வரி கட்டாத பணம், நமக்கு சொந்தமில்லை என்பதை மையமாக வைத்து விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். படம் விமர்சனங்களில் பேசப்பட்டது. அவர் இயக்கும் இந்த இரண்டாவது படம் நல்ல கருத்துக்களுடன் மண் மீது சொர்க்கமாக உருவாகி வருகிறது.
படக்குழு:-
தயாரிப்பு: கே பி தனசேகர்
இணை தயாரிப்பு: ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி, லெனினிய செல்வன்
ஒளிப்பதிவு: ஆஅர் எச் அசோக்
இசை: அகமது விக்கி
எடிட்டிங்: முகன் வேல்
கலை: குணசேகர்
சண்டைப் பயிற்சி: ஏஸ் ஆர் ஹரி முருகன்
நடனம்: சுரேஷ் சித்
பி ஆர் ஓ: கோவிந்தராஜ்



