யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர் கே வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள ‘ஸ்கூல்’ திரைப்படம் கோடைக் கொண்டாட்டமாக இந்த மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இயக்குநரிடம் பேசியபோது, சமீபத்தில் நடந்த யோகிபாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.

என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடியவர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.

ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா பிரமோஷன்களுக்கும் வருகை தந்துள்ளார்.

அவர் சினிமாவை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால் இதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்