Home சினிமா உணர்வுப்பூர்வமான கதைக்களம்… காதல், துரோகம், சமூக போராட்டங்களை உள்ளடக்கிய திரைக்கதை… மையல் படத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறார்...

உணர்வுப்பூர்வமான கதைக்களம்… காதல், துரோகம், சமூக போராட்டங்களை உள்ளடக்கிய திரைக்கதை… மையல் படத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறார் இயக்குநர் ஏ பி ஜி ஏழுமலை 

மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் ஏ பி ஜி ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது.

இந்த படம் மே 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஏழுமலை. “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. நடிகர்கள் சேது, சம்ரிதி தாரா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தொழில்நுட்பக் குழுவினரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ‘மையல்’ நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்