Home சினிமா இயக்குநர் செல்வராகவன், நடிகை குஷி ரவி இணையும் படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் துவங்கியது!

இயக்குநர் செல்வராகவன், நடிகை குஷி ரவி இணையும் படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் துவங்கியது!

இயக்குநர் செல்வராகவன், நடிகை குஷி ரவி இணையும் புதிய படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். இன்று இந்த படம் பூஜையுடன் துவங்கியது.

படத்தில் ஒய் ஜி மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், சேலம் தீபக், ஹேமா, லிர்த்திகா மற்றும் என். ஜோதிகண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

திறமையான தொழில்நுட்ப குழுவினரால் உருவாக்கப்படும் இந்தப் படம், தொழில்நுட்பத்துடன் கூடிய கதைச் சொல்லும் முறையை வழங்க இருக்கிறது.

சிறந்த இயற்கை சூழலால் செழித்த சேலத்தில் இந்தப் படத்தின் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் திரைப்படத்தை திரையுலகிற்கு கொண்டு வர படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் உள்ளிட்டவை விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்