Home சினிமா குற்றம் கடிதல் 2-ம் பாகத்தின் கிளிம்ஸ் வெளியானது; படப்பிடிப்பு துவங்குகிறது! 

குற்றம் கடிதல் 2-ம் பாகத்தின் கிளிம்ஸ் வெளியானது; படப்பிடிப்பு துவங்குகிறது! 

2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

 

‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களை இயக்கி, ‘அநீதி’, ‘தலைமை செயலகம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார்.

தயாரிப்பாளரக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் ஜெ.எஸ்.கே. தரமணி, பேரன்பு, கபடதாரி, அநீதி, ப்ரெண்ட்ஷிப், வாழை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஃபயர்’ படத்தில் இயக்குனராகவும் களம்கண்டார். அப்படத்தில் தானே முதன்மை பாதிரத்தில் நடித்து மிகப்பெரும் வெற்றியை கண்டார் ஜே.எஸ்.கே.

இதனைத் தொடர்ந்து குற்றம் கடிதல்-2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதையானது, ஒரு ஓய்வு பேரும் தருவாயிலுள்ள 60 வயது நிரம்பிய பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசாங்கம் ‘நல்லாசிரியர்’ விருதை அறிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் வாழ்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவங்களை எவ்வாறு எதிர் கொள்கிறார்? அந்த சம்பவம் என்ன? என்பது போன்ற அடுக்கடுகான திருப்பங்களுடன் அனைவர் மனதிலும் பதியும் வகையில் ஒரு வலுவான கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் இருக்கும்.

தமிழகமெங்கும் பல பகுதிகளிலும், கேரளாவிலும் நடத்தப்படவுள்ளது. முன்னதாக படத்தின் கிளிம்ஸ் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்