Home சினிமா அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங் பங்களிப்பை முடித்தார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா!

அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங் பங்களிப்பை முடித்தார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா!

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு , ராம் அச்சந்தா , கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், M தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.

‘காட் ஆஃப் தி மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு  கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற ‘அகண்டா 2 : தாண்டவம்’ படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை, M தேஜஸ்வினி நந்தமூரி பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி  இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும், கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.

மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு எடிட்டிங் செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்