Home சினிமா தீவிரவாதிகளுடன் பயணிக்கும் 10 வயது சிறுவன்… பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையில் எஸ் பி பொன் சங்கர்...

தீவிரவாதிகளுடன் பயணிக்கும் 10 வயது சிறுவன்… பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையில் எஸ் பி பொன் சங்கர் இயக்கும் ‘ஃபிளாக்.’

எஸ் பி பொன் சங்கர் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் ‘ஃபிளாக்.’

தூம், க்ரிஷ், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த
மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொட்டுக்காலி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்த தீஹான், போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா, கேரளா, கன்னட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது ”10 வயது சிறுவன் தீஹான் தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான், ஒரு முக்கிய சூழ்நிலையில் அவன் டெல்லிக்கு புறப்படுகிறான். வழி தெரியாமல் இந்தியா முழுக்க பயணிக்கிறான். ஒரு கட்டத்தில் தீவிரவாத கூட்டத்திலும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, அப்போது எதிர்பாராத விதமாக காவல் துறையிடம் மாட்டிக் கொள்கிறான். அவன் ஏன் டெல்லி நோக்கி பயணித்தான், அவன் உன்மையில் தீவிரவாதிதானா, இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் காடசிகளைப்” என்றார்.

ராஜா ரவிவர்மா இசையமைக்க, படத்தொகுப்பு பணிகளை வரதராஜன் கவனித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்