நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அழகான கமர்ஷியல் படைப்பாக அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கியுள்ள ‘மதர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ்.
இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலானதாக மாறியுள்ளது. ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். அதை அடிப்படையாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். அர்திகா நாயகியாக நடித்துள்ளார்.
எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார்.




