Home சினிமா ஜெ எஸ் கே நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகிவருகிற ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் முதற்கட்ட...

ஜெ எஸ் கே நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகிவருகிற ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

திரில்லர் டிராமாவாக உருவாகிவருகிற, பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, திட்டமிட்டிருந்ததைவிட மூன்று நாட்கள் முன்பாகவே கோடைக்கானலில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

படத்தில் ஜெ எஸ் கே (ஜெ எஸ் சதீஷ்குமார்), பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பவல், பட்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படம் பற்றி பேசிய இயக்குநர் எஸ்.கே.ஜீவா “கொடைக்கானலில் ஏற்பட்ட சவாலான காலநிலையையும் மீறி, திட்டத்திற்கு முன்னதாகவே முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். இது எங்கள் குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பாலும், தயாரிப்பு அணியின் தளராத ஒத்துழைப்பாலும் சாத்தியமாகியது. தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜே எஸ் கே சதீஷ்குமார் அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருந்தார், ஒரு காட்சியில் எந்தவித உதவியுமின்றி இயல்பாகக் கண்ணீர் விட்டபோது, அங்கே இருந்த முழுக் குழுவினரிடமிருந்தும் கைத்தட்டல்களைப் பெற்றார்.

இப்படியான தருணங்களே, திரைப்படக் கலையை உயர்த்தும் உண்மையான சான்றுகள். நடிகர், நடிகைகள் அனைவரின் பாராட்டத்தக்க நடிப்பிற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் மேலும் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தென்காசி, சிறுமலை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்