Home சினிமா பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘கனகவள்ளி’ மேடை நாடகம் சுவேட்சா சக்கரவர்த்தியின் நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது!

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘கனகவள்ளி’ மேடை நாடகம் சுவேட்சா சக்கரவர்த்தியின் நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது!

பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘கனகவள்ளி’ என்னும் மேடை நாடகம் இப்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தை இயக்கியிருக்கும் ஜெயராவ் சேவூரியிடம் படம் பற்றி கேட்டபோது ”மிகவும் செழிப்பாக உள்ள திம்மா ரெட்டிபள்ளி கிராமத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனினும் அவ்வூரில் உள்ள ஒரு சமூக சேவகர் அம்மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். அதைக் கண்டு பொறாமை அடைந்த அங்குள்ள ஆறு பண்ணையார்கள் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் கால்நடைகளையும், விவசாயத்தையும், வீடுகளையும் சேதம் செய்து இளம் பெண்களையும் நாசம் செய்கின்றனர். இத்தகைய தீய செயல்களை செய்வது இவர்கள் தான் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

அந்த நிலையில் கிராமத்தில் சுனிதா என்னும் ஒரு இளம் பெண் கனகவள்ளி என்னும் தேவதையாக விஸ்வரூபம் எடுத்து அந்த கயவர்களை அழித்து, துயரத்திலிருந்து ஊர் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பது உணர்வுபூர்வமாக சொல்லப்படுகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சுவேட்சா சக்கரவர்த்தி கனகவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முறையாக பரதநாட்டியம், சண்டைப் பயிற்சி, இசை கற்றுத் தேர்ந்துள்ளார். 24 வயதேயான அவர் படத்தின் வலிமையான கதாபாத்திரத்தை தத்ரூபமாக உணர்ந்து வாழ்ந்துள்ளார்” என்றார்.

இயக்குநர் ஜெயராவ் சேவூரி

படத்தில் அருணாச்சலம், விமல் ராஜ், ஜேஎஸ் நாராயணா, கிருஷ்ணவேணி, ஸ்ரீதரன் , ராக்கேஷ், ஸ்ரீஹரி, யுவன் சங்கர், ராஜ்குமார்,நித்தின், ஜெய் பிரகாஷ்,மாறன், பல்லவி,சௌந்தர்யா, விஷால் ராஜ், சவுரவ், ஜெகதீஷ், சீனிவாசன் உள்ளிட்டோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

ஜெயராவ் சேவூரி கூத்து பட்டறையில் நடிகர்கள் பசுபதி, கலைராணி ஆகியோரோடு இவரும் ஒன்றாக நடிப்பு பயிற்சி பெற்றவர்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், அதர்வா, ஆதி, முனீஸ் காந்த், வினோத் சாகர் போன்றோர் இவரின் தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கடல், அவள் பெயர் தமிழரசி, மெட்ராஸ்,
ஜெய்பீம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்
ஜெயராவ் சேவூரி.

படக்குழு:-

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் – ஜெயராவ் சேவூரி

தயாரிப்பு – ருவா புரொமோட்டர்ஸ் விக்னேஷ், வேலுமணி

ஒளிப்பதிவு – பிரதீப்

எடிட்டிங் – பி.லெனின்

மக்கள் தொடர்பு – வெங்கட்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்