சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடிப்பில், அரிதான காதல் கதையாக பரத் மோகன் இயக்கியுள்ள படம் ’மெஜந்தா.’
உளவியல் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் வசீகரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
போஸ்டரில் அடர்த்தியான மெஜந்தா வண்ணம் படத்தின் மையக்கருவான ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்’ என்பதை பிரதிபலிக்கிறது. அது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நுணுக்கமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பரத் மோகன் (இக்லூ புகழ்) ‘மெஜந்தா’ படத்தை இயக்கியுள்ளார். இரண்டு மனங்களின் வெவ்வேறு பக்கங்களை இந்தக் கதை நுணுக்கமாக ஆய்வு செய்கிறது. இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான தருணங்களை உணர்ந்து நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோத்தகிரியில் முக்கிய காட்சிகளும் மற்ற ஷெட்யூல் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இது கண்ணைக் கவரும் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான உணர்வுகளுடன் 2026-ம் ஆண்டின் தவிர்க்க முடியாத காதல் படமாக இருக்கும்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம், ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
