Home சினிமா அதிகாரம் கடைக்கோடி மனிதனிடம் கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்பதே படத்தின் கதை! -‘மை லார்ட்’...

அதிகாரம் கடைக்கோடி மனிதனிடம் கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்பதே படத்தின் கதை! -‘மை லார்ட்’ பட விழாவில் நடிகர் சசிகுமார் பேச்சு

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் பேசிய சசிகுமார் “இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.
இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர்.
இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார்.  இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும்.  நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்” என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம் ”இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன். அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம்” என்றார்.
இயக்குநர் ராஜு முருகன் நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம். இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட்  உருவானது.
இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
ஷான் ரோல்டன் இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.
சசிக்குமார் அண்ணன்  இல்லையென்றால் இந்தப்படம் இல்லை, அவர் முழு படத்திற்கும் உறுதுணையாக இருந்தார்” என்றார்.
நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகை சைத்ரா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர்கள் பாலா , விஜய் மில்டன், த செ ஞானவேல், பிரேம்குமார், மாரிசெல்வராஜ், லிங்குசாமி, ஏ வெங்கடேஷ், திங்க் மியூசிக் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படம் குறித்துப் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்